கடந்த 30 ஆண்டுகளாக பல்லடம் பகுதியை சேர்ந்த 6 பேர் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.
ரூ.40 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு
பதிவு: ஜனவரி 10, 2022 15:22 IST
ஆக்கிரமிப்பு கோவில் நிலத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள்.
திருப்பூர்:
தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பு கோவில் நிலங்கள் இந்து சமய அறநிலையத்துறை மூலம் மீட்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் நாரணாபுரம் அங்காளம்மன் கோவிலுக்கு சொந்தமான 8.95 ஏக்கர் புஞ்சை நிலம் பல்லடம் திருப்பூர் பிரதான சாலையில் உள்ளது.
இந்த நிலத்தை கடந்த 30 ஆண்டுகளாக பல்லடம் பகுதியை சேர்ந்த 6 பேர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். அதனை மீட்க வேண்டுமென பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தநிலையில் இன்று காலை ஆக்கிர மிக்கப்பட்டிருந்த நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். அந்த நிலத்தின் மதிப்பு ரூ.40 கோடி ஆகும்.
Related Tags :