உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

சேவல் சண்டை சூதாட்டம் - 3 பேர் மீது வழக்கு

Update: 2022-01-10 09:32 GMT
அவினாசியை அடுத்து தொட்டக்களாம்புதூர் முள்ளுக்காட்டில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அவினாசி:

அவினாசி போலீசார் சுற்றுவட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவினாசியை அடுத்து தொட்டக்களாம்புதூர் முள்ளுக்காட்டில் சேவல் சண்டை வைத்து சூதாட்டம் நடத்தியதாக ராமநாதபுரத்தை சேர்ந்த அங்கமுத்து மகன் தமிழ்செல்வன் ( வயது 23), பொன்னுசாமி மகன் தங்கராஜ் மற்றும் சேவூர் காமராஜ் நகரை சேர்ந்த சுரேஷ் மகன் பிரதீப் (20) ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். 

மேலும் அவர்களிடமிருந்து 2 சேவல்கள், பணம் ரூ .1600 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News