உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா பாதிக்கப்பட்டால், 60 வயதிற்கு மேற்பட்டடோர் பூஸ்டருக்காக 3 மாதம் காத்திருக்க வேண்டும்

Published On 2022-01-09 08:22 GMT   |   Update On 2022-01-09 08:22 GMT
நாடு முழுவதும் நாளை முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு 3-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது.
சென்னை:

நாடு முழுவதும் நாளை முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு 3-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக இடம் மற்றும் நேரத்தை 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் 2 தவணைகளில் எந்த வகை தடுப்பூசி செலுத்த இருக்கிறார்களோ அதே வகை தடுப்பூசியை தான் 3-வது தவணைக்கும் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2 தவணை தடுப்பூசிகளும் 9 மாதங்களுக்கு முன்பே செலுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கொரோனா பாதிப்பு இருந்தால் அவர்கள் எப்போது 3-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது.

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சமீப காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தால் அவர்கள் குறைந்த பட்சம் 3 மாதம் காத்திருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறி உள்ளனர்.

3 மாத இடைவெளிக்கு முன்பு 3-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
Tags:    

Similar News