உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

தொழிலாளர்கள் சட்டம் மீண்டும் அமல்- டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தல்

Published On 2022-01-09 07:12 GMT   |   Update On 2022-01-09 07:12 GMT
இ.எஸ்.ஐ., திட்டத்தை செயல்படுத்தாமல் டாஸ்மாக் மதுக்கடை தொழிலாளர்களுக்கு பிற மருத்துவ திட்டம் பயனளிக்கும் என தவறாக கணக்கிடப்பட்டுள்ளது.
திருப்பூர்:
 
டாஸ்மாக் ஊழியர்களுக்கு, தொழிலாளர் சட்டங்களில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் தொழிலாளர் சட்டத்தை மீண்டும் அமலாக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் (சி.ஐ.டி.யு.,)  தொழிலாளர் நல அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

மேலும் போராட்டக்குழு சார்பில் தொழிலாளர் துறை அரசு செயலர், கமிஷனருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அதில் கூறியிருப்பதாவது:-

தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வேண்டிய, தொழிலாளர் நலத்துறை, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம், தேசிய பண்டிகை விடுமுறை சட்டங்களில் இருந்து மதுக்கடை ஊழியருக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

மீண்டும் டாஸ்மாக் தொழிலாளருக்கு தொழிலாளர் நல சட்டங்களை அமல்படுத்த வேண்டும். இ.எஸ்.ஐ., திட்டத்தை செயல்படுத்தாமல் டாஸ்மாக் மதுக்கடை தொழிலாளர்களுக்கு பிற மருத்துவ திட்டம் பயனளிக்கும் என தவறாக கணக்கிடப்பட்டுள்ளது. 

எனவே விதிவிலக்கை ரத்து செய்துவிட்டு மீண்டும் இ.எஸ்.ஐ., திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 

இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News