உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பிளஸ்2 பொதுத்தேர்வு - 20ந்தேதிக்குள் தேர்வு கட்டணம் செலுத்த அறிவுறுத்தல்

Published On 2022-01-08 06:45 GMT   |   Update On 2022-01-08 06:45 GMT
பள்ளி மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை வசூலித்து, வரும் 20-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:

இந்தாண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அறிவித்துள்ளார். இந்நிலையில் செய்முறை பாடங்கள் அடங்கிய பாடத்தொகுப்பில் படிப்பவர்களுக்கு ரூ.225, செய்முறை இல்லாத பாடங்களை கொண்டவர்களுக்கு ரூ. 175 தேர்வு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் எஸ்.சி.,எஸ்.டி., எம்.பி.சி., பிரிவை சேர்ந்த மாணவர்கள் (தமிழ் வழி தவிர இதர பயிற்று மொழிகளில் படிப்பவராக இருந்தாலும்), பி.சி., பி.சி.எம்., பிரிவில் பெற்றோரின் ஆண்டு வருமானம், 2.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள மாணவர்களுக்கும் தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை வசூலித்து, வரும் 20-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கண் பார்வையற்றோர், காதுகேளாத மற்றும் வாய் பேச இயலாதோர், விபத்துக்களால் உடல் ஊனமுற்றவர்கள், மனநலம் குன்றியோர், ‘டிஸ்லெக்சியா’ குறைபாடு மற்றும் நரம்பியல் குறைபாடு உள்ளவர்கள் தேர்வெழுத சலுகை கேட்டு உரிய சான்றிதழுடன் 13-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News