உள்ளூர் செய்திகள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு- அமைச்சர் தகவல்

Published On 2022-01-05 09:14 GMT   |   Update On 2022-01-05 09:14 GMT
தமிழகம் முழுவதும் சனிக்கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

கொரோனா பரவல் தடுப்பு பணி தொடர்பாக கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில்  சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆலோசனைக்கு பின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



* ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் இனிமேல் சனிக்கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும். இதன் மூலம் தமிழக அரசு ஞாயிறு அன்று முழு ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்து இருப்பது உறுதியாகியுள்ளது.

மேலும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், மேலும் கட்டுப்பாடுகள் தொடர்பாக விரிவான அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


Tags:    

Similar News