உள்ளூர் செய்திகள்
மழைநீரில் தத்தளித்து செல்லும் வாகனங்கள்

ராமேசுவரத்தில் நள்ளிரவு முதல் கனமழை- பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Published On 2022-01-02 09:50 GMT   |   Update On 2022-01-02 09:50 GMT
ராமேசுவரத்தில் நள்ளிரவு முதல் கனமழை பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ராமேசுவரம்:

தென்தமிழக கடற்கரையையொட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி ராமேசுவரம் பகுதியில் நேற்று நள்ளிரவு திடீரென மழை பெய்தது. இந்த மழை இன்று காலை வரை நீடித்தது. தொடர்ந்து மழை பெய்ததால் பொது மக்களும், ராமேசுவரம் சுற்றுலா பயணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

சாலைகள் மற்றும் முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் செல்வதில் சிரமங்கள் ஏற்பட்டது. முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்கள் சென்றன. மழை காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

அதுபோல அன்றாட கூலி தொழிலாளிக்கு செல்லும் கட்டிட தொழிலாளர்கள், கரையோரம் மீன்பிடி சார்ந்த வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் பணிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

Tags:    

Similar News