உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல்லையில் புதிதாக 17 பேருக்கு கொரோனா

Published On 2022-01-01 10:49 GMT   |   Update On 2022-01-01 10:49 GMT
நெல்லை மாவட்டத்தில் இன்று புதிதாக 17 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கடந்த 27-ந்தேதி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்ற நிலை உருவானது. ஆனால் மறுநாள் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக தொற்று பரவல் சற்று அதிகரிக்க தொடங்கியது.

மாவட்டத்தில் நேற்றைய பாதிப்பு 12 ஆக இருந்த நிலையில் அது மேலும் 5 உயர்ந்தது. இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 17 ஆக உள்ளது. அதிகபட்சமாக வள்ளியூரில் 8 பேருக்கும், மாநகரில் 4 பேருக்கும், பாளையில் 3 பேருக்கும், அம்பை, களக்காட்டில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதியானது.

நீண்ட நாட்களுக்கு பிறகு தொற்று இரட்டை இலக்கத்திற்கு சென்றதால் சுகாதாரதுறையினர் தடுப்பு பணிகளில் மீண்டும் களம் இறங்கி உள்ளனர். 

இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட தொடர் பண்டிகை காரணமாக பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் தொற்று எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.

பொங்கல் பண்டிகை வரை இந்த சூழ்நிலை நிலவலாம் என தெரிகிறது. எனினும் அதனை தடுக்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.

நெல்லை மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 794 ஆக அதிகரித்து உள்ளது. 49,298 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 60 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரை 430 பேர் உயிரிழந்தனர்.
Tags:    

Similar News