உள்ளூர் செய்திகள்
கைது

நாசரேத்தில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

Update: 2021-12-28 09:51 GMT
நாசரேத்தில் மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாசரேத்:

நாசரேத் மர்காஷிஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 39). இவர் அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

துரைசாமி கடந்த 26-ந்தேதி ஓட்டல் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். வேலை முடிந்து பின்னர் வந்து பார்க்கும் போது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். எனினும் மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து நாசரேத் போலீசில் துரைசாமி புகார் அளித்தார்.

நாசரேத் வியாபாரிகள் தெரு பகுதியை சேர்ந்தவர் எட்வர்டு (59). இவர் கடந்த 24-ந்தேதி வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை மறுநாள் காலையில் பார்க்கும் போது காணவில்லை. இது குறித்து எட்வர்டு நாசரேத் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று நாசரேத் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் மணிநகர் பகுதியை சேர்ந்த இருதயராஜ் (46) என்பதும், காணாமல் போன மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News