உள்ளூர் செய்திகள்
குற்றாலம் அருவி

டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 வரை குற்றாலத்தில் குளிக்க அனுமதி இல்லை

Published On 2021-12-27 23:16 GMT   |   Update On 2021-12-27 23:16 GMT
சுமார் 8 மாத கால இடைவெளிக்குப் பிறகு டிசம்பர் 20-ல் குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
தென்காசி:

தென்காசி மாவட்டம் குற்றாலம் சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குளித்து மகிழ தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநில சுற்றுலா பயணிகளும் வந்து செல்வார்கள்.

கொரோனா 2-வது அலை காரணமாக கடந்த 16.4.2021 முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. எனவே, அருவிகளில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, டிசம்பர் 20-ம் தேதி முதல் குற்றாலத்தில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், குற்றால அருவிகளில் டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 வரை 3 நாட்கள் குளிக்க அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொற்று நோய் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

Similar News