உள்ளூர் செய்திகள்
பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நாய்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பெண்கள் வார்டில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நாய்

Published On 2021-12-27 04:26 GMT   |   Update On 2021-12-27 04:26 GMT
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையின் கர்ப்பிணி பெண்கள் வார்டில் நாய் ஒன்று சுதந்திரமாக சுற்றித்திரிவதும், நோயாளிகள் படுக்கக்கூடிய படுக்கையில் படுத்து தூங்குவதும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனையில் எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அரசு மருத்துவமனையில் குப்பை கழிவுகளை அகற்றுவதில்லை, கால்வாய்களை தூர் வாருவது இல்லை, இரவு நேரங்களில் மின் விளக்குகளை போடுவதில்லை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்பொழுது அரசு மருத்துவமனையின் கர்ப்பிணி பெண்கள் வார்டில் நாய் ஒன்று சுதந்திரமாக சுற்றித்திரிவதும், நோயாளிகள் படுக்கக்கூடிய படுக்கையில் நாய் படுத்து தூங்குவதும், பொதுமக்களை அச்சுறுத்துவதும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் கர்ப்பிணிகள் பிரிவில் பிறந்த பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுடன் உதவிக்கு கூடவரும் முதியோர்கள் ஆகியோர் உள்ளனர். இந்தநிலையில் நாய்கள் சுதந்திரமாக சுற்றித் திரிவதால் அச்சத்துடன் சிகிச்சை பெற்று வரும் நிலை உள்ளது. எனவே மருத்துவமனை நிர்வாகம் கவனமுடன் செயல்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

Similar News