உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

செல்லப்பிராணிகளுக்கான மருந்துகள் இருப்பு வைப்பு

Published On 2021-12-19 06:40 GMT   |   Update On 2021-12-19 06:40 GMT
உடுமலை கால்நடை பன்முக மருத்துவமனைக்கு நாய், கோழி பூனை என செல்லப்பிராணிகளை சிகிச்சைக்காகக்கொண்டு வருகின்றனர்.
உடுமலை:
 
உடுமலையில் அரசு கால்நடை பன்முக மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. 

இங்கு எக்ஸ்ரே, ஸ்கேனிங் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்தி கால்நடை மற்றும் செல்லப்பிராணிகளுக்கு  புண், வயிற்றுப்போக்கு, உடல் இளைப்பு போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

குறிப்பாக நோயின் தன்மையைக்கண்டறிந்து அதற்கேற்ப ஊசி, மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக, டாக்டர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். செல்லப்பிராணிகளுக்கு தேவையான மருந்துகள் இருப்பும் வைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் ஜெயராம் கூறியதாவது:-

உடுமலை கால்நடை பன்முக மருத்துவமனைக்கு நாய், கோழி பூனை என  செல்லப்பிராணிகளை சிகிச்சைக்காகக்கொண்டு வருகின்றனர்.

தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் உடுமலை கோட்டத்தில் அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் செல்லப்பிராணிகளுக்கு தேவையான மருந்துகள் கிடைக்கும். 

இதேபோல் ரேபிஸ் தடுப்பு மருந்தும் உள்ளது. இதனை, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News