உள்ளூர் செய்திகள்
தற்கொலை

கோவையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம்- லாரி டிரைவர் தற்கொலை

Update: 2021-12-18 09:39 GMT
கோவையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்ட லாரி டிரைவர் மனவேதனை அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:

கோவை வடவள்ளி அருகே உள்ள வி.எம்.டி. நகரை சேர்ந்தவர் பழனிவேலு (வயது 45). லாரி டிரைவர். கடந்த 2003-ம் ஆண்டு இவர் கவுரி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 2007-ம் ஆண்டு கமலம் (35) என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்தார். இவருக்கு ஒரு மகன், மகள் ஆகியோர் உள்ளனர். 2 மனைவிகளும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

2011-ம் ஆண்டு குடும்ப தகராறு காரணமாக முதல் மனைவி கவுரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் பழனிவேலு குடி பழக்கத்துக்கு அடிமையானார். தினசரி மது குடித்து விட்டு வந்து அவர் தனது 2-வது மனைவி கமலத்தின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்தார். இதனால் அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று வெளியே சென்ற பழனிவேலு அந்த பகுதியில் உள்ள கருவேலம் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட பழனிவேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News