உள்ளூர் செய்திகள்
கைது செய்யப்பட்ட வாலிபர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவையும் படத்தில் காணலாம்.

திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த வாலிபர்கள் கைது

Published On 2021-12-15 09:53 GMT   |   Update On 2021-12-15 09:53 GMT
மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர்கள் போலீசாரை கண்டதும் நிற்காமல் வேகமாக சென்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
திருப்பூர்:

திருப்பூர் வாவிபாளையம்-கணக்கம்பாளையம் சாலையில் திருமுருகன் பூண்டி போலீஸ் பொறுப்பு இன்ஸ்பெக்டர் பதுருன்னிசா பேகம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர்கள் போலீசாரை கண்டதும் நிற்காமல் வேகமாக சென்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

மோட்டார் சைக்கிளையும் சோதனை நடத்தினார்கள். அப்போது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு சப்ளை செய்வது தெரியவந்தது.

மேலும் அவர்கள் சமத்துவபுரம் பாரதிநகரை சேர்ந்த சவுகத் அலி(வயது24) என்பதும், இவர் தனது நண்பரான வெற்றிவேலன் (20) என்பவருடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து சவுகத் அலி மற்றும் வெற்றிவேலன் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் 2 பேரிடம் இருந்து 5கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News