உள்ளூர் செய்திகள்
மாயம்

திருச்சியில் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயம்- போலீசார் விசாரணை

Update: 2021-12-12 10:32 GMT
திருச்சியில் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயமானது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:

திருச்சி திருவானைக் காவல் நெல்சன் ரோடு மொட்டைக்கோபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்ல முத்து. இவரது மனைவி மயிலாத்தாள். இவர்களது மகள் ராஜராஜேஸ்வரி ( வயது17 ). சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற ராஜராஜேஸ்வரி பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் மயிலாத்தாள் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் வழக்கு பதிந்து மாயமான ராஜராஜேஸ்வரியை தேடி வருகிறார்.

இதேபோல் திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் கலாவதி. இவரது சகோதரி மகள் சங்கவி. (வயது 21). இவர் கலாவதியின் வீட்டில் தங்கியிருந்து திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று அருகில் உள்ள கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து கலாவதி அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, மாயமான கல்லூரி மாணவி சங்கவியை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவத்தில் திருச்சி உறையூர் 80 அடி ரோடு கீழவைக்கோல்கார தெருவை சேர்ந்த கோவிந்தராஜன் (வயது69) என்பவரை காணவில்லை. இதுகுறித்து அவரது மகன் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News