உள்ளூர் செய்திகள்
மீனாட்சி அம்மன் கோவில்

2 டோஸ் போட்டால் மட்டுமே அனுமதி- அறிவிப்பை வாபஸ் பெற்றது மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம்

Published On 2021-12-12 07:38 GMT   |   Update On 2021-12-12 07:38 GMT
2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அனுமதி என்ற உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மதுரை:

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அனுமதிக்கப்படுவார்கள் என நேற்று கோவில் நிர்வாகம் அறிவித்தது. நாளை முதல் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கோவிலுக்கு வருபவர்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும் எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். கோவில் நிர்வாகத்தின் அறிவிப்பு பக்தர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தனர்.

இந்த நிலையில், 2 தவணை
கொரோனா தடுப்பூசி
செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அனுமதி என்ற உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

நடைமுறை சிக்கல் காரணமாக இந்த அறிவிப்பை திரும்பப் பெறுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Tags:    

Similar News