உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் சாலையை சீரமைக்க களமிறங்கிய பொதுமக்கள்

Published On 2021-12-07 04:23 GMT   |   Update On 2021-12-07 04:23 GMT
30 அடி அகல வழித்தடம் 10 அடியாக குறைந்துள்ளது. இருபுறமும் புதர்மண்டி காணப்படுவதால் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சியின் வி.ஜி.வி., கார்டனில் நல்லூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அவ்வழியாக செல்லும் மண் ரோடு, காசிபாளையம் மணியகாரம்பாளையம் ரோட்டுக்கு செல்கிறது. 

வி.ஜி.வி., கார்டன் பகுதி மக்கள் ஊத்துக்குளி ரோடு சென்று வரவும் திருப்பூரில் இருந்து நொய்யல் ரோடு வழியாக சென்று வரவும் இந்த வழியை பயன்படுத்துகின்றனர். இந்தநிலையில் 30 அடி அகல வழித்தடம் 10 அடியாக குறைந்துள்ளது.

இருபுறமும் புதர்மண்டி காணப்படுவதால் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. புதர்களை அகற்ற வேண்டுமென அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் தாங்களாகவே இப்பணியை மேற்கொண்டனர். 

இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில்:

மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததால் நாங்களே வழித்தடத்தை செப்பனிட முடிவு செய்துள்ளோம். முதற்கட்டமாக 2 பொக்லைன் எந்திரங்களை கொண்டு செடி, கொடி, புதர்கள் அகற்றப்பட்டுள்ளது என்றனர்.
Tags:    

Similar News