உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

பள்ளி நூலகங்களில் திருப்பூர் குமரன் நாடக நூல்

Published On 2021-12-05 07:55 GMT   |   Update On 2021-12-05 07:55 GMT
சமீபத்தில் குமரனின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் கருவம்பாளையத்தை சேர்ந்தவர் ஆழ்வைக்கண்ணன். தனியார் பள்ளி தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் குமரனின் வாழ்க்கை வரலாற்றை நாடக வடிவில் எழுதி 2004-ல் முதல் பதிப்பை வெளியிட்டார். விடுதலை போராட்ட வீரரின் இந்த வரலாற்று ஆவணம் அனைத்து பொது நூலங்களிலும் வைக்கப்பட்டன. 

பல்வேறு பள்ளி கலைநிகழ்ச்சிகளிலும், பொது மேடைகளிலும் நாடகமாக அரங்கேறியுள்ளன. இந்நூலை அனைத்து அரசு, தனியார், சுயநிதி பள்ளி நூலகங்களிலும் வைக்க மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.இதன் அடிப்படையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், ‘திரும்பிப்பார் திருப்பூர் குமரன்’ எனும் வரலாற்று நாடக நூலை வாங்கி பயன்பெறுமாறு அனைத்து பள்ளிகளுக்கும் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து ஆழ்வை கண்ணன் கூறியதாவது:-

உரைநடை வடிவில் இல்லாது அனைத்து வயது குழந்தைகளும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் குமரனின் வரலாற்றை நாடக வடிவில் அளித்துள்ளேன். 

சமீபத்தில் குமரனின்  118-வது பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டது. திருப்பூர், தாராபுரம் உடுமலை, பல்லடம் உள்ளிட்ட அனைத்து கல்வி மாவட்டங்களிலும் உள்ள அனைத்து துவக்க, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 75503 16500 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News