உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

ஆர்பிட்ரேசன் அவசர செயற்குழு கூட்டம்-7ந்தேதி நடக்கிறது

Published On 2021-12-04 08:48 GMT   |   Update On 2021-12-04 08:48 GMT
ஜாப்ஒர்க் கட்டண தொகையை பெற்றுத்தர கேட்டு, நிட்டிங் நிறுவனம், ஆர்பிட்ரேசன் கவுன்சிலை நாடியுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் வீரபாண்டியில் உள்ள ஒரு ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனம் பல்லடம் ரோடு தமிழ்நாடு தியேட்டர் அருகே உள்ள நிட்டிங் நிறுவனத்துக்கு துணி தயாரிக்க ஆர்டர் வழங்கியுள்ளது.துணி தயாரித்து கொடுத்து 6  மாதத்துக்கு மேலாகியும் அதற்கான தொகை ரூ.3.50 லட்சத்தை வழங்காமல் ஏற்றுமதி நிறுவனம் இழுத்தடிக்கிறது.

எனவே ஜாப்ஒர்க் கட்டண தொகையை பெற்றுத்தர கேட்டு, நிட்டிங் நிறுவனம், ஆர்பிட்ரேசன் கவுன்சிலை நாடியுள்ளது. 

இந்த வழக்கு கவுன்சிலில் பதிவாக உள்ளது.வரும் 7-ந் தேதி மாலை ஆர்பிட்ரேசனின் அவசர செயற்குழு, 'சைமா' சங்க அரங்கில் மாலை 5 மணிக்கு கூடுகிறது. இதில் நிலுவையில் உள்ள 13 வழக்குகளை கையாள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
Tags:    

Similar News