செய்திகள்
பல்லடத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நீதிமன்ற கட்டிடம்.

கட்டிடப்பணிகள் நிறைவு - திறப்பு விழாவுக்கு தயாரான பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றம்

Published On 2021-11-30 07:44 GMT   |   Update On 2021-11-30 07:44 GMT
கட்டிட பணிகள் 100 சதவீதம் முடிவடைந்து உள்ளது. நீதிபதி இருக்கைகள், விசாரணை கூண்டு போன்ற மர வேலைகள் இன்னும் முடியவில்லை.
பல்லடம்:

பல்லடம் மங்கலம் ரோட்டில் உள்ள குற்றவியல் நீதிமன்ற கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. சுமார் 200 ஆண்டுகளை கடந்து இன்றும் கம்பீரமாக உள்ளது. இதன் அருகிலேயே மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இடப்பற்றாக்குறை உள்ளதால் கடந்த வருடம் ரூ.5.50 கோடி  மதிப்பில், ஒருங்கிணைந்த நீதிமன்றம், நீதிபதி அறைகள்,எழுத்தர் அறை, நூலகம், பதிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் இரண்டுஅடுக்கு தளங்களுடன் கட்ட பூமி பூஜை போடப்பட்டு கட்டிட பணிகள் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் கட்டிட பணிகள் 100 சதவீதம் முடிவடைந்து உள்ளது. நீதிபதி இருக்கைகள், விசாரணை கூண்டு போன்ற மர வேலைகள் இன்னும் முடியவில்லை. அந்த வேலைகள் முடிந்த பின்பு விரைவில் நீதிமன்றம் திறப்பு விழா குறித்து அறிவிப்பு வெளியாகும் என வக்கீல்கள் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில்:

பல்லடம் அருகே வடுகபாளையத்தில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் சார்பு நீதிமன்றத்தை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு மாற்ற வேண்டும்.

தற்போது குற்றவியல் நீதிமன்றம் செயல்படும் பழைய கட்டிடத்திற்கு சார்பு நீதிமன்றத்தை மாற்றினால் நீதிமன்ற வழக்கு விசாரணைக்காக செல்லும் வக்கீல்கள், பொதுமக்கள். அரசு அதிகாரிகள் சுமார் 2 கிலோ மீட்டர் பயணம் செய்து 2 நீதிமன்றகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருக்காது என்றனர். 
Tags:    

Similar News