செய்திகள்
கைது

தூத்துக்குடி பால் வியாபாரி கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Published On 2021-11-15 12:01 GMT   |   Update On 2021-11-15 12:01 GMT
தூத்துக்குடியில் பால்வியாபாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தந்தை, மகன் உள்ளிட்ட 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்தவர் ஆவுடையப்பன் (61). பால்வியாபாரி. இவரை முன்விரோதம் காரணமாக, எதிர் வீட்டை சேர்ந்த சுப்பையா (53), அவரது சகோதரர் நாராயணன் (48), சுப்பையா மகன்கள் பிரகாஷ் (21), ராம்ஜெயந்த், மற்றும் கந்தசாமி என்ற ராஜா உள்ளிட்டோர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்தனர். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பையா, நாராயணன், பிரகாஷ், ராம்ஜெயந்த், கந்தசாமி என்ற ராஜா ஆகியோரை கைது செய்தனர்.

தொடர்ந்து 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சுப்பையா, நாராயணன், பிரகாஷ், கந்தசாமி என்ற ராஜா ஆகிய 4 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.

இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 172 பேர் குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News