செய்திகள்
மோசடி

சென்னை மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சம் மோசடி

Published On 2021-11-14 09:37 GMT   |   Update On 2021-11-14 09:37 GMT
சென்னை மாநகராட்சியில் செயற்பொறியாளர் வேலை வாங்கித் தருவதாக ரூ.2 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
வருசநாடு:

தேனி மாவட்டம் மயிலாடும்பாறை நேருஜி நகரைச் சேர்ந்தவர் பாக்கியம். இவருக்கு திருப்பூரைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர் அறிமுகமானார். தனக்கு சென்னை மாநகராட்சியில் அதிகாரிகளை தெரியும் என்றும் யாருக்காவது வேலை வேண்டும் என்றால் என்னை அணுகலாம் என கூறினார்.

இதனை நம்பிய பாக்கியம் தனது மகனுக்கு செயற்பொறியாளர் வேலை கேட்டு ஜெயராஜை அணுகியுள்ளார். அப்போது சென்னை மாநகராட்சியில் வேலை உள்ளதாக கூறிய ஜெயராஜ் அதற்காக பணம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு முதல் தவணையாக ஜெயராஜின் மகன் ராஜமதன் வங்கி கணக்கில் ரூ.2 லட்சம் செலுத்தினார். அதன் பின்னர் வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்தார். பாக்கியம் இது குறித்து கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை. எனவே தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையில் தனிப்படை போலீசார் திருப்பூருக்கு விரைந்து சென்றனர்.

அங்கு ஜெயராஜிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டதால் அவரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News