செய்திகள்
கனமழை

தொடர் மழையால் சேலம், கள்ளக்குறிச்சியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Update: 2021-11-12 01:24 GMT
கனமழை எதிரொலியால் சென்னை உள்பட 7 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சேலம்:

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை கரையைக் கடந்தது. தாழ்வு மண்டலம் கரையை கடந்த போது காற்றின் வேகம் 45 முதல் 55 கி.மீ  வேகத்தில் வீசியது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று வலுவை இழக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக சேலம், கள்ளக்குறிச்சியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

ஏற்கனவே ராணிப்பேட்டை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது.
Tags:    

Similar News