செய்திகள்
கொள்ளை

இரணியல் அருகே கணபதி கோவிலில் பூஜை பொருட்கள் கொள்ளை

Published On 2021-10-29 10:39 GMT   |   Update On 2021-10-29 10:39 GMT
இரணியல் அருகே கணபதி கோவிலில் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள பூஜை பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரணியல்:

இரணியல் அருகே வள்ளியாற்றின் கரை பகுதியில் செல்வராஜ கணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் காலை மற்றும் மாலை இருவேளை பூஜை நடைபெற்று வருகிறது. சங்கடஹர சதுர்த்தி மற்றும் பவுர்ணமி நாட்களில் திரளாக பக்தர்கள் கலந்து கொள்வர்.

இந்த நிலையில் நேற்று காலை கோவில் பூசாரி வழக்கம்போல் நடை திறக்க வந்தார். அப்போது கோவிலின் உள்பக்கம் இருந்த 2 பித்தளை குத்துவிளக்குகள் மற்றும் சூடத்தட்டு, தீபாராதணை பொருட்கள் மாயமாகி இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.20 ஆயிரம் ஆகும். இது குறித்து கோவில் நிர்வாகி செந்திலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த கோவிலுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதியில் வைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமிராக்காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்காணிப்பு கேமிராவில் கோவில் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர் மொபெட் வண்டியில் கோவிலுக்கு வந்து செல்லும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் போலீசார் மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர். கோவில் திருட்டில் மர்ம நபர் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
Tags:    

Similar News