செய்திகள்
கோப்புபடம்

முன்பதிவில்லா பெட்டிகளுடன் திருப்பூர் வழியாக நாகர்கோவிலுக்கு ரெயில் இயக்கம்

Published On 2021-10-28 04:18 GMT   |   Update On 2021-10-28 04:18 GMT
சென்னையை தலைமை இடமாக கொண்ட தெற்கு ரெயில்வே மொத்தம் 14 ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டி இணைப்பதாக அறிவித்துள்ளது.
திருப்பூர்;

கோவை, திருப்பூரை கடந்து திருச்சி, நாகர்கோவில் செல்லும் ரெயில்களில் அடுத்த மாதம் முதல் முன்பதிவில்லா பொது பெட்டி இணைக்கப்பட உள்ளது.வருகிற 1-ந்தேதி முதல் திருச்சி -பாலக்காடு ரெயிலில் 6 பொது பெட்டிகள் மற்றும் 10-ந் தேதி முதல் நாகர்கோவில் - கோவை ரெயிலில் 6 பொது பெட்டி இணைக்கப்படுகிறது. மேற்கண்ட பெட்டியில் முன்பதிவு கட்டணத்தை விட குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும்.

திருச்சி ரெயில், பெட்டவாய்த்தலை, குளித்தலை, சித்தலவாய், கரூர், புகலூர், கொடுமுடி, பாசூர், ஈரோடு, ஈங்கூர், ஊத்துக்குளி, திருப்பூர், சோமனூர், சூலூர் ரோடு, சிங்காநல்லூர், பீளமேடு ரெயில் நிலையங்களில் நின்று கோவை சென்று பாலக்காடு செல்லும்.

நாகர்கோவில் ரெயில் வள்ளியூர், நாங்குநேரி, செங்குளம், திருநெல்வேலி, வாஞ்சிமணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடை ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல் பாளையம், கரூர், புகலூர், கொடுமுடி, பாசூர், ஈரோடு, ஊத்துக்குளி, திருப்பூர், சோமனூர், பீளமேடு, கோவை வடக்கு நிலையங்களில் நின்று கோவை சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை தலைமை இடமாக கொண்ட தெற்கு ரெயில்வே மொத்தம் 14 ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டி இணைப்பதாக அறிவித்துள்ளது. இதில் 7 ரெயில்கள் மட்டுமே தமிழகத்தில் இயங்குகிறது. இரு ரெயில்கள் சேலம் கோட்டத்தில் இயக்கப்படுகிறது. மற்றவை கேரளா மாநிலத்தில் இயங்கும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .
Tags:    

Similar News