செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

Published On 2021-10-21 07:34 GMT   |   Update On 2021-10-21 07:34 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.35,872-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் தங்கம் விலை உயர்ந்தும், சரிந்தும் காணப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.4,484-க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ.35 ஆயிரத்து 872-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் 30 காசுகள் உயர்ந்து ரூ.70.20-க்கும் 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,300 உயர்ந்து ரூ.70 ஆயிரத்து 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News