செய்திகள்
கோப்புபடம்

மழை வேண்டி வினோத வழிபாடு

Published On 2021-10-18 10:07 GMT   |   Update On 2021-10-18 10:07 GMT
ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாளில் பருவமழை போதிய அளவு பெய்வதற்காக கோவில் வளாகத்தில் திரளும் பக்தர்கள் கஞ்சி வழிபாடு நடத்துகின்றனர்.
மடத்துக்குளம்:

மடத்துக்குளம் தாலுகா சாமராயபட்டியில் பாப்பம் பாறை உள்ளது. தரைமட்டத்தில் இருந்து பல அடி உயரத்தில் உள்ள இந்த பாறை ஒன்றின் மீது கல்யாண விநாயகர், ஆதிகேசவப்பெருமாள், சுப்பிரமணியர் கோவில்கள் உள்ளன. 100 ஆண்டுகளை கடந்து பழமை வாய்ந்த இந்த கோவிலில் வித்தியாசமான வழிபாடு நடக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாளில் பருவமழை போதிய அளவு பெய்வதற்காக கோவில் வளாகத்தில் திரளும் பக்தர்கள் கஞ்சி வழிபாடு நடத்துகின்றனர். அதாவது கஞ்சி காய்ச்சி சாமிக்கு படையல் வைத்து வணங்குகின்றனர். பின்னர் அந்த கஞ்சியை பாறையில் ஊற்றி அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகின்றனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில்:

கஞ்சி சாப்பிடுவதற்கு இலை தட்டு எதுவும் பயன்படுத்துவதில்லை. மழை வேண்டி நடக்கும் இந்த வழிபாடு பல ஆண்டுகளாக தொடர்கிறது. இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தினோம் என்றனர். இந்த வழிபாட்டின் இறுதியில் மடத்துக்குளம் பகுதியில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News