செய்திகள்
கோப்புபடம்

பேக்கரி கடைகளில் அதிரடி ஆய்வு - சுகாதாரமற்ற 16 கிலோ காரம், இனிப்புகள் அழிப்பு

Published On 2021-10-08 08:07 GMT   |   Update On 2021-10-08 08:07 GMT
ஆய்வு முடிவு அடிப்படையில் கலப்பட டீ தூள் பயன்படுத்தியவர் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரவி, விஜயராஜா, பாலமுருகன் ஆகியோர் காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பகுதியில், டீ கடைகள் மற்றும் பேக்கரிகளில் ஆய்வு நடத்தினர்.

இதில் கலப்பட டீ தூள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் 2 பேக்கரிகள் சிக்கின. இதையடுத்து டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வு முடிவு அடிப்படையில் கலப்பட டீ தூள் பயன்படுத்தியவர் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் கலப்பட டீ தூள் விற்பனை செய்பவர் யார் எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து பேக்கரிகளில் நடத்திய ஆய்வில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடாத கார வகைகள் 10 கிலோ, சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 6 கிலோ இனிப்பு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
Tags:    

Similar News