செய்திகள்
கோப்புபடம்

வெளியூர் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு

Published On 2021-10-06 04:44 GMT   |   Update On 2021-10-06 04:44 GMT
சில மாதங்களாக வெளியூர் வரத்து அதிகமாக இருந்ததால் விலை சரிவு ஏற்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் பொங்கலூர் பகுதியில் வைகாசி பட்டத்தில் நடவு செய்த தக்காளி அறுவடை செய்யப்பட்டு வருகிறது. மழையின் காரணமாக தக்காளி அழுகி வரத்து குறைந்து விலை உயர்வு ஏற்படும் என்று விவசாயிகள் கருதினர். 

விலை உயர்வை எதிர்பார்த்து விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். சில மாதங்களாக வெளியூர் வரத்து அதிகமாக இருந்ததால் விலை சரிவு ஏற்பட்டது. 12 கிலோ தக்காளி ரூ.120க்கு விற்பனையானது. உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகினர்.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் செடியில் உள்ள தக்காளி அழுக தொடங்கியுள்ளது. வெளியூர் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது. தற்போது 12 கிலோ தக்காளி ரூ.250க்கு விற்பதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News