செய்திகள்
கோப்புபடம்.

காங்கயம் பேருந்து நிலையத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்

Published On 2021-10-05 08:26 GMT   |   Update On 2021-10-05 08:26 GMT
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் காங்கயம் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
காங்கயம்:

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் 25-ம் ஆண்டு விழாவை ஒட்டி நாடு முழுவதும் அக்டோபர் 2-ந்தேதி முதல் 14-ந் தேதி வரை பொதுமக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம், கருத்தரங்கம் மற்றும் இதர நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதன்படி காங்கயம் தாலுகாவில் நடத்தப்பட வேண்டிய முகாம்கள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்த சிறப்பு ஆலோசனைக்கூட்டம் காங்கயம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தை காங்கயம் வக்கீல்கள் சங்கத் தலைவர் என்.கார்த்திகேயன், காங்கயம் நீதித்துறை நடுவர் பிரவீன்குமார் ஆகியோர் தொடங்கிவைத்தனர். 

இதில் காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான பர்சாத் பேகம் சிறப்புரையாற்றினார். காங்கயம் வட்டாட்சியர் சிவகாமி, காங்கயம் காவல் துணைக்கண்காணிப்பாளர் குமரேசன், நகராட்சி ஆணையர் முத்துகுமார் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், சிறப்பு நீதித்துறை நடுவர் மற்றும் அரசு வக்கீல்கள் கலந்து கொணடனர்.

இதைத்தொடர்ந்து காங்கயம் பேருந்து நிலையத்தில் சட்ட விழிப்புணர்வு தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களிடம் விநியோகம் செய்யப்பட்டன. சட்ட உதவி சார்ந்த கருத்துகளையும் எடுத்துரைத்தனர்.
Tags:    

Similar News