செய்திகள்
சைக்கிள் பயணம் தொடங்கிய போது எடுத்தப்படம்.

சுற்றுலா தினத்தை முன்னிட்டு உடுமலையில் சைக்கிள் பயணம்

Published On 2021-09-29 07:50 GMT   |   Update On 2021-09-29 07:50 GMT
சுற்றுலாவும், உள்ளடக்கிய வளர்ச்சியும் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு சைக்கிள் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உடுமலை:

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி அரவிந்த்குமார் தலைமையில் உடுமலை தேஜஸ் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் மற்றும் உடுமலை சைக்கிள் ரைடர்ஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் எஸ்.எம்.டிராவல்ஸ் நாகராஜ் ஆகியோரின் முன்னிலையில் சுற்றுலாவும், உள்ளடக்கிய வளர்ச்சியும் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு சைக்கிள் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதிகாலை 4 மணியளவில் உடுமலையில் புறப்பட்டு கெடிமேடு, ஊஞ்சவேலம்பட்டி, பொள்ளாச்சி, நா.மு.சுங்கம், எரிசனம்பட்டி வழியாக திருமூர்த்தி அணை, தளி, அமராவதி அணை வழியாக மீண்டும் உடுமலை தேஜஸ் மஹாலை சைக்கிள் பயணம் வந்தடைந்தது.

மாவட்ட சுற்றுலா அதிகாரி அரவிந்த்குமார் சிறப்புரை ஆற்றினார். விழாவில் சுற்றுலா ஆர்வலர்கள், ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் சத்தியம்பாபு, சண்முகம், பிரசாந்த், பொன்ராஜ், விஜயராஜேஷ், டால்மியா, விக்னேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News