செய்திகள்
கோப்புபடம்

தஞ்சை சரகத்தில் 165 ரவுடிகள் கைது - டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் தகவல்

Published On 2021-09-25 10:38 GMT   |   Update On 2021-09-25 10:38 GMT
தஞ்சை சரகத்தில் உள்ள தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 16 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தஞ்சாவூர்:

தமிழகத்தில் குற்ற செயல்களை கட்டுப்படுத்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்படி போலீசார் ரவுடிகளை கைது செய்து வருகின்றனர். அதன்படி தஞ்சை சரகத்தில் உள்ள தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 16 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

அந்த தனிப்படை போலீசார் ரவுடிகளை கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் கொலை, கொள்ளை, கஞ்சா கடத்தல், பொது அமைதிக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு உள்ளவர்கள் மற்றும் பல ஆண்டுகளாக குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள் உள்பட 165 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் குற்ற வழக்கு பின்னணி கொண்ட 534 பேரை தணிக்கை செய்து அவற்றில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட இருந்த 35 பேரை தஞ்சை வருவாய் அலுவலர் முன்பு ஆஜர்படுத்தினர். தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறும். மேலும் குற்றம் செய்பவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள், உதவி செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட தகவலை தஞ்சை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News