செய்திகள்
கோப்புபடம்.

உடுமலையில் யானை தந்தம் கடத்திய வழக்கில் மேலும் 2பேருக்கு வலைவீச்சு

Published On 2021-09-24 07:55 GMT   |   Update On 2021-09-24 07:55 GMT
சம்பவத்தில் ஈடுபட்ட குழிப்பட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த சின்னத்தங்கம், வேலு ஆகியோரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
உடுமலை:

ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகம் கரட்டூர் சரகம் சடையன்பாறை பகுதியில் கடந்த மாதம் 29-ந் தேதி இறந்து கிடந்த யானையின் தந்தம் வெட்டி எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது. 

இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் கடந்த 2-ந் தேதி, அதே பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.5 மீட்டர் நீளமுள்ள 15 கிலோ யானை தந்தம் வனத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. மேலும் அது இறந்து கிடந்த யானையின் தந்தம் என உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சம்பவத்தில் ஈடுபட்ட குழிப்பட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த சின்னத்தங்கம் (வயது 31), வேலு (24) ஆகியோரை தனிப்படை அதிகாரிகள் நேற்று கைது செய்து, தாராபுரம் ஜே.எம்., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

அவர்கள் இறந்து கிடந்த யானையின் தந்தத்தை வெட்டி எடுத்ததாக வாக்கு மூலம் அளித்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை வனத்துறைஅதிகாரிகள் தேடி வருகின்றனர்.  
Tags:    

Similar News