செய்திகள்
மனு கொடுக்க வந்த போட்டி தேர்வாளர்கள்.

அரசு பணியில் ஆண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் - போட்டி தேர்வாளர்கள் மனு

Published On 2021-09-23 09:45 GMT   |   Update On 2021-09-23 09:45 GMT
40 சதவிகிதம் என்ற உள் ஒதுக்கீடுஅமல்படுத்தப்பட்டால் ஆண்களின் பணி மிகவும் பாதிக்கப்படும்.
திருப்பூர்:

தமிழ்நாடு அரசு பணிக்கு தயாராகிக் கொண்டிருக்கும் போட்டி தேர்வாளர்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

நாங்கள் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அரசு தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம். தற்போது பெண்களுக்கு 40 சதவிகிதம் ஒதுக்கீடு தமிழக அரசால்அறிவிக்கப்பட்டுள்ளது. நமது மாநிலத்தில் சமூகநீதி கோட்பாடு பின்பற்றப்பட்டு வருகிறது. 

பெண்களுக்கு 40 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டால் ஆண்களின்அரசு பணி கனவு பறிபோகும் நிலை ஏற்படும். எனவே பெண்களுக்கு உள் ஒதுக்கீடு என்ற சட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். 

30 சதவீதம் என்ற நிலையிலேயே பெண்களின் பணிவாய்ப்பு அதிகமாக உள்ளது. தற்போது 40 சதவிகிதம் என்ற உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் ஆண்களின் பணி மிகவும் பாதிக்கப்படும். 

எனவேஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலின சமத்துவம் என்ற அடிப்படையில் சரிசமமாக இட ஒதுக்கீடு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மாவட்ட கலெக்டர் கோரிக்கை மனுவை ஏற்று உரிய வழியில் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News