செய்திகள்
மாநில தேர்தல் ஆணையம்

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 24 மணி நேரமும் கண்காணிக்க உடனடியாக பறக்கும் படை அமைக்க உத்தரவு

Published On 2021-09-21 11:57 GMT   |   Update On 2021-09-21 11:57 GMT
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான மனுதாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட உள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக அடுத்த மாதம் 6-ந்தேதி மற்றும் 9-ந்தேதி நடைபெற இருக்கிறது. ஏழு கட்சிகள் களம் காண்கிறது. முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இதனால் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாளையுடன வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.

உள்ளாட்சி தேர்தலில் கட்சிகளை தாண்டி அந்தந்த பகுதியில் பிரபலமானவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். பஞ்சாயத்து தேர்தலில் ஒரு வாக்கிற்கு மூக்குத்தி, தங்க மோதிரம், குத்து விளக்கு போன்ற பொருட்கள் வழங்கப்படும்.

இதை தடுப்பதற்காக ஒரு நீதிபதி, இரண்டு அல்லது மூன்று காவலர் கொண்ட ஒரு பறக்கும் படை என்ற வகையில், ஒன்று அல்லது மூன்று ஊராட்சி ஒன்றியங்களை உள்ளிடக்கிய ஒவ்வொரு தொகுப்பிற்கும் ஒரு பறக்கும் படை அமைக்க உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் விதிமுறை அமலில் இருக்கும் இடங்களில் ரூ. 50 ஆயிரத்திற்குமேல் ஆவணம் இல்லாமல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News