செய்திகள்
கோப்புபடம்

இடுவாய் கிராமத்தில் 30 வகை மரங்களுடன் மூங்கில் பூங்கா

Published On 2021-09-21 05:59 GMT   |   Update On 2021-09-21 05:59 GMT
இந்தியா மூங்கில் உற்பத்தியில் உலக அளவில் இரண்டாமிடத்தில் இருக்கிறது. இருப்பினும் கிராமப்புற விவசாயிகளுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு இல்லை.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி, ‘வனத்துக்குள் திருப்பூர்’ திட்டக்குழுவினர் இணைந்து இடுவாய், சின்னக்காளிபாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி நிலத்தில் மூங்கில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

மூங்கில் மரங்கள் அதிக அளவு கார்பன் -டை-ஆக்சைடை உறிஞ்சி அதிக அளவு ஆக்சிஜனை வெளியிடுகின்றன.

இதன் மூலம் சுற்றுச்சூழல் சிறக்கும்.மொத்தம் 12 ஏக்கர் பரப்பில் 30 வகை மூங்கில் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. அதன் இடையே அரியவகை மரக்கன்றுகளும் சமீபத்தில் நடப்பட்டுள்ளன. 

இதுகுறித்து ‘வனத்துக்குள் திருப்பூர்’ திட்டக்குழுவினர் கூறியதாவது:

மூங்கில் பூங்காவில் குழந்தைகள் விளையாட்டு பூங்கா, மூலிகை பண்ணை, திடக்கழிவு மேலாண்மை அமைப்பு, கழிவுநீர் மேலாண்மை மற்றும் மறு சுழற்சி கட்டமைப்பு, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட திட்ட பணிகளும் செயல்படுத்தப்பட உள்ளன. 

தற்போது மூங்கில் நன்கு வளர துவங்கியுள்ளன. இந்தியா மூங்கில் உற்பத்தியில் உலக அளவில் இரண்டாமிடத்தில் இருக்கிறது. இருப்பினும் கிராமப்புற விவசாயிகளுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு இல்லை. மத்திய அரசு தேசிய மூங்கில் இயக்கத்தை மறுகட்டமைப்பு செய்துள்ளது.

இந்திய வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் 30 வகை மூங்கில் மரங்களை வழங்கியுள்ளது. தற்போது 40 வகையான அரிய வகை மரக்கன்றுகளும் பூங்காவில் நட்டு வளர்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News