செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2021-09-09 09:15 GMT   |   Update On 2021-09-09 09:15 GMT
தொலைநோக்கு பார்வையுடன் கூடிய கொள்கைகளை வகுக்க வேண்டும்.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பில் மத்திய மாநில அரசிடம் சில கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் டீசல், பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொருட்களின் உற்பத்தி விலை மற்றும் சரக்கு சேவை வரி போன்றவற்றை பொருட்களின் மேல் அட்டையில் குறிப்பிட வேண்டும். 

பெட்ரோலிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது அவற்றை சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். விவசாயிகளுக்கு அவர்களால் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்களுக்கு நல்ல விலை நிர்ணயம் செய்து உற்பத்தியை பெருக்க வேண்டும். 

சமையல் எண்ணெய், சிறு தானியங்கள், போன்ற உணவு பொருட்களில் நாடு தன்னிறைவு அடையும் வகையில் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய கொள்கைகளை வகுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
Tags:    

Similar News