செய்திகள்
கோப்புபடம்

கால்நடை வளர்ப்புக்கான மானிய திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுமா?

Published On 2021-09-08 07:10 GMT   |   Update On 2021-09-08 07:10 GMT
வழக்கமாக பருவமழை தொடங்கும் முன்பு தீவனப்புல் வளர்ப்பிற்கான இடுபொருட்கள் பயனாளிகளுக்கு வினியோகிக்கப்படும்.
உடுமலை:

உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் பால் உற்பத்தி மற்றும் இதர தேவைகளுக்காக மாடு, எருமைகள், ஆடு வளர்ப்பது அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் கால்நடைத்துறை சார்பில் பல்வேறு மானியத்திட்டங்கள் பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கால்நடை வளத்தை பெருக்கவும் முன்பு வழங்கப்பட்டு வந்தது. இதற்கான பயனாளிகள் கால்நடைத்துறையின் மருந்தகம், கிளை நிலையங்கள் வாயிலாக தேர்வு செய்யப்பட்டனர்.

வழக்கமாக பருவமழை தொடங்கும் முன்பு தீவனப்புல் வளர்ப்பிற்கான இடுபொருட்கள் பயனாளிகளுக்கு வினியோகிக்கப்படும். தீவனப்புல் வளர்ப்பு திட்டத்தில் சோளம், அசோலா, ஊறுகாய்புல் சாகுபடிக்கும் தேவையான இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட்டது. 

விளைநிலங்களில் மழை நீர் தெளிப்பான் அமைக்கவும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு மானியம் வினியோகித்தனர். தற்போது அந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது.  

இதுகுறித்து கால்நடை வளர்ப்போர் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழை மற்றும் பி.ஏ.பி., மண்டல பாசனத்திற்கு முன் விதைகளை வழங்கினால் மட்டுமே தீவன வகைகளை விளைநிலத்தில் வளர்க்க முடியும்.

விலையில்லா ஆடு திட்டம் துவங்கிய பிறகு தீவனம் மற்றும் பால் வளம் பெருக்கத்துக்கான மானிய திட்டங்களை கண்டுகொள்வதில்லை.எனவே  மீண்டும் மானியத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்  என்றனர்.
Tags:    

Similar News