செய்திகள்
கோப்புபடம்

மழையால் அழுகி வீணாகும் வெங்காயம் - விவசாயிகள் கவலை

Published On 2021-09-02 07:20 GMT   |   Update On 2021-09-02 07:20 GMT
உற்பத்தி செலவே கிலோவிற்கு ரூ.20 ஆகிறது. தற்போது விற்பனையாகும் விலை உற்பத்தி செலவுக்கு கூட கட்டுப்படியாகவில்லை.
திருப்பூர்:

கடந்த ஆண்டு வெங்காயத்திற்கு கிராக்கி நிலவியதால் பலர் வெங்காய சாகுபடியில் ஈடுபட்டனர். சாகுபடி பரப்பு அதிகரித்ததால் தற்போது வெங்காய வரத்து அதிகரித்துள்ளது. முதல்தர வெங்காயம் மட்டும் கிலோ ரூ.35க்கு விற்கிறது. இரண்டாம் தர வெங்காயத்தை கேட்க ஆளே இல்லை என்ற நிலையே காணப்படுகிறது. 

வியாபாரிகளும் எங்களால் வாங்க இயலாது, நீங்கள் இருப்பு வைத்து விடுங்கள் என்று கூறுவதால் வேறு வழியின்றி பல விவசாயிகள் தங்களிடம் உள்ள வெங்காயத்தை இருப்பு வைக்க தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:

உற்பத்தி செலவே கிலோவிற்கு ரூ.20ஆகிறது. தற்போது விற்பனையாகும் விலை உற்பத்தி செலவுக்கு கூட கட்டுப்படியாகவில்லை. மழையும் பெய்ய தொடங்கியுள்ளதால் இருக்கும் வெங்காயமும் அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மழையில் நனைந்தால் வெங்காயத்தை கேட்ட விலைக்கு விற்பனை செய்வதைத் தவிர வேறு வழியில்லை. வியாபாரிகளே 6 கிலோ வெங்காயத்தை 100 ரூபாய்க்கு விற்பனை செய்யும் போது நாங்கள் என்ன செய்வது? என்றனர்.
Tags:    

Similar News