செய்திகள்
சுல்தானை கயிறு கட்டி தீயணைப்பு வீரர்கள் மீட்ட காட்சி.

கயிறு அறுந்ததில் கிணற்றுக்குள் தவறி விழுந்து தவித்த வாலிபர் - தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

Published On 2021-08-31 10:03 GMT   |   Update On 2021-08-31 10:03 GMT
கிணறு சிதலமடைந்து கிடந்ததால் அதனை தூர்வார முடிவு செய்யப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் ராயபுரம் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் 80அடி ஆழ கிணறு உள்ளது. இங்கு 5 அடி அளவுக்கு தண்ணீர் கிடந்தது. கிணறு சிதலமடைந்து கிடந்ததால் அதனை தூர்வார முடிவு செய்யப்பட்டது.

அப்பகுதியை சேர்ந்த சுல்தான் (வயது 22) என்பவர் கிணற்றை தூர்வார கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கினார். அப்போது திடீரென கயிறு அறுந்ததில் கிணற்றுக்குள் விழுந்து தவித்தார்.  

இதையடுத்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி பாஸ்கரன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று கயிறு மூலம் கிணற்றுக்குள் தவித்த சுல்தானை மீட்டு மேலே கொண்டு வந்தனர். 
Tags:    

Similar News