செய்திகள்
அம்மாபாளையத்தில் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதை படத்தில் காணலாம்.

பல்லடம் பி.ஏ.பி.,வாய்க்காலில் உடைப்பு - வீணாக வெளியேறும் தண்ணீர்

Published On 2021-08-30 10:40 GMT   |   Update On 2021-08-30 10:40 GMT
135 நாட்கள் என்பது படிப்படியாக குறைந்து ஒவ்வொரு முறையும் ஆகஸ்ட் மாதத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
பல்லடம்:
 
பல்லடம் அருகே வாய்க்காலில் ஏற்பட்டுள்ள உடைப்பால் பி.ஏ.பி. பாசனத் தண்ணீர் வீணாகி வருகிறது. 

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

பி.ஏ.பி. பாசனதிட்டமானது சுமார் 124 கிலோமீட்டர் தூரம் வாய்க்கால்கள் வழியாக பொள்ளாச்சி, உடுமலை, சூலூர், பல்லடம், காங்கயம் என பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் பாசனத்திற்கு பயனளிக்கும் வகையில் உள்ளது. 

இத்திட்டத்தின்படி ஆண்டுக்கு ஒருமுறை 135 நாட்களுக்கு தண்ணீர் திறப்பது வழக்கமாக இருந்தது. பிறகு 135 நாட்கள் என்பது படிப்படியாக குறைந்து ஒவ்வொரு முறையும் ஆகஸ்ட்  மாதத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. பி.ஏ.பி வாய்க்கால் அமைக்கப்பட்டு சுமார் அரை நூற்றாண்டு காலம் ஆகிறது. மேலும் சரியாக பராமரிக்கப்படாமலும் இருக்கிறது. இதனால் ஆங்காங்கே கரைகள் பெயர்ந்து சேதமடைகின்றன. 

கடந்த சில நாட்களுக்கு முன் பி.ஏ.பி., வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் ஊராட்சி அம்மாபாளையத்தில் உள்ள வாய்க்காலில் கரைகள் பெயர்ந்து உடைப்பு ஏற்பட்டது. இதனால் வாய்க்காலில் இருந்து தண்ணீர் வெளியேறி சாலையில் வழிந்து வீணாகிறது. சம்பந்தப்பட்ட பி.ஏ.பி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. 

தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் நிலையில் பி.ஏ.பி பாசனத் தண்ணீர் இப்படி வீணாகுவதை பார்த்து வேதனையாக உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் பாசன தண்ணீர் வீணாகி வருகிறது என்றனர். 
Tags:    

Similar News