செய்திகள்
கல்லணை

கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு முழுவதுமாக நிறுத்தம்

Published On 2021-08-30 08:17 GMT   |   Update On 2021-08-30 08:17 GMT
காவிரி பாசனப் பகுதிகளுக்கு கல்லணையிலிருந்து காவிரியில் தண்ணீர் விடுவது நேற்று மாலை 4 மணி நிலவரப்படி முழுவதுமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
திருக்காட்டுப்பள்ளி:

கல்லணையில் இருந்து வெண்ணாற்றில் குறைந்த அளவாக 306 கனஅடியும், கல்லணை கால்வாயில் 2,219 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 13 ஆயிரத்து 296 கன அடி ஆகவும், மேட்டூர் அணையின் நீர் இருப்பு 30.567 டி.எம்.சி. ஆகவும், நீர்மட்டம் 67.23 அடியாகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 6 ஆயிரத்து 650 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி பாசன பகுதிகளில் கடந்த 24-ந் தேதிக்கு பிறகு பரவலாக மழை பெய்யவில்லை. வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்படுகிறது.

நடவு செய்யப்பட்டுள்ள குறுவை நெல் பயிருக்கு மேல்உரம் இடவும், களை பறிக்கும் பணிகளை செய்யவும் தண்ணீர் தேவைப்படும் நிலையில், பிரதான ஆறுகளான காவிரி மற்றும் வெண்ணாற்றில் தண்ணீர் திறப்பு மிகவும் குறைக்கப்பட்டுள்ளது, எந்த அடிப்படையில் என்பது புரியவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். காவிரி மற்றும் வெண்ணாற்றின் கிளை ஆறுகள் மற்றும் வாய்க்கால்களின் கடைமடை பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழ்நிலையில் காவிரியில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு இருப்பது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News