செய்திகள்
கோப்புபடம்

கோவை மாநகரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 28 பேர் கைது

Published On 2021-08-25 10:24 GMT   |   Update On 2021-08-25 10:24 GMT
கோவை மாநகரில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை, குட்கா உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை:

தமிழகத்தில் புகையிலை, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெட்டிக்கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார் வந்தது. 

இந்த புகாரின் அடிப்படையில் மாநகர போலீசார் ஆர். எஸ். புரம், வெரைட்டி ஹால் ரோடு, உக்கடம், ரேஸ்கோர்ஸ், சாய்பாபா காலனி, ரத்தினபுரி, ராமநாதபுரம், போத்தனூர், குனியமுத்தூர், சிங்காநல்லூர், பீளமேடு, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் சென்று சோதனை செய்தனர். 

சோதனையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெட்டிக்கடை உரிமையாளர்கள் 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை, குட்கா உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News