செய்திகள்
மனு அளிக்க வந்த பூசாரிகள்.

அரசின் சலுகைகள் கிடைக்க நடவடிக்கை - பூசாரிகள் வலியுறுத்தல்

Published On 2021-08-18 09:54 GMT   |   Update On 2021-08-18 09:54 GMT
கடந்த 2 ஆண்டாக கொரோனா பரவலால் கோவில்களில் பூஜை மட்டுமே நடந்து வருகிறது.
திருப்பூர்:

திருப்பூர் வடக்கு மாவட்ட பூசாரிகள் சமூக நலச்சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

திருப்பூரில் சின்ன சின்ன கிராம கோவில்களில் பூஜை செய்து வரும் எங்களுக்கு போதுமான வருமானம் கிடைக்கவில்லை. கடந்த 2 ஆண்டாக கொரோனா பரவலால் கோவில்களில் பூஜை மட்டுமே நடந்து வருகிறது. பக்தர்கள் வருகை இல்லாததால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம். 

அரசு அறிவித்திருந்த பூசாரிகளுக்கான ரூ.4 ஆயிரம், இலவச ரேஷன் பொருட்கள் போன்ற சலுகைகள் வழங்கப்படவில்லை. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூசாரிகளுக்கு மட்டும் அனைத்து சலுகைகளும் கிடைக்கிறது. இது அரசின் பாரபட்சத்தை காட்டுகிறது. 

வருமானம் இன்றி தவித்துக் கொண்டிருக்கும் அனைத்து பூசாரிகளுக்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News