செய்திகள்
வெங்காயம்

வடமதுரை பகுதியில் வெங்காயம் விலை குறைவால் விவசாயிகள் கவலை

Published On 2021-08-11 10:33 GMT   |   Update On 2021-08-11 10:33 GMT
வடமதுரை பகுதியில் அதிக வரத்தின் காரணமாக வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
வடமதுரை:

வடமதுரை, அய்யலூர், கொம்பேரிபட்டி, பழங்காநத்தம், சுக்காம்பட்டி, புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் புறங்களில் வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது.

அதிக வருவாயை ஈட்டித் தரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் 1 கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை விலைக்கு வாங்கி வெங்காயம் நடவு செய்தனர். நடவு நாட்களில் இருந்து 40 முதல் 50 நாட்களுக்குள் சாகுபடிக்கு வந்துவிடும்.

தற்போது அதிக வரத்தின் காரணமாக வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். ஒரு கிலோ ரூ.13 முதல் ரூ.30 வரை மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டது. ஒரு சில வியாபாரிகள் மொத்தமாக வாங்கிக் கொள்கின்றனர். இருந்தபோதும் விவசாயிகளுக்கு பறிப்பு கூலிக்குகூட பணம் கிடைக்கவில்லை. ஒரு சில விவசாயிகள் வெங்காயத்தை பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதும் போதிய அளவு விலை கிடைக்கவில்லை என அவர்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News