செய்திகள்
தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள்.

தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளால் விபத்து அபாயம்

Published On 2021-08-09 08:22 GMT   |   Update On 2021-08-09 08:22 GMT
பனியன் கம்பெனிகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் இரவு நேரங்களில் இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர்.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி பாச்சாங்காட்டு பாளையத்தில் இருந்து அருள்புரம் செல்லும் ரோட்டில் மின் கம்பங்கள்அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின்கம்பங்களில் உள்ள மின்கம்பிகள் மிகவும் தாழ்வான நிலையில் தொங்குகின்றன.

இந்த சாலையின் வழியாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் பனியன் கம்பெனிகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் இரவு நேரங்களில் இவ்வழியாக இருசக்கர வாகனங்களில்  செல்கின்றனர்.

மின்கம்பி அறுந்து விழுந்தால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து  மின் வாரியத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

எனவே விபத்துகள் நிகழும் முன் தடுக்க  தாழ்வான நிலையில் உள்ள மின் கம்பிகளை  சரி செய்ய  விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News