செய்திகள்
மருத்துவ காப்பீடு அட்டை

மருத்துவ காப்பீடு அட்டைக்கு விண்ணப்பிக்க கூடுதல் அலுவலகங்கள்

Published On 2021-08-04 10:14 GMT   |   Update On 2021-08-04 10:18 GMT
பொதுமக்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து விண்ணப்பிக்க வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்காக காப்பீட்டு அட்டைகள் வழங்கும் அலுவலகம் திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்புக்கு தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்கள் முதல் அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் மூலம் இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மருத்துவ காப்பீட்டு அட்டை பெற பொதுமக்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகமாக விண்ணப்பிக்க வருகிறார்கள்.

இதையடுத்து  கூட்டம் கூடுவதை தவிர்க்க திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகம், தாராபுரம் தாசில்தார் அலுவலகம் ஆகிய இடங்களில் முதல்- அமைச்சர் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் அலுவலகங்கள் புதிதாக கூடுதலாக ஏற்படுத்தப்பட்டு  செயல்பட தொடங்கியுள்ளது. 

அந்தந்த பகுதியை சேர்ந்தவர்கள் அருகில் உள்ள அலுவலகங்களுக்கு சென்று மருத்துவ காப்பீட்டு அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.பொதுமக்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து விண்ணப்பிக்க வர வேண்டும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News