செய்திகள்
கோப்புபடம்

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

Published On 2021-08-04 09:35 GMT   |   Update On 2021-08-04 09:35 GMT
சிறு, குறு வணிகர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யும் ஆயுட்கால சந்தா கட்டணத்தொகை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

தமிழ்நாடு அரசு வணிகவரித்துறை மூலம் வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நல வாரியத்தின் மூலமாக வணிகர்களுக்கு, உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவித்தொகை, நலிவற்ற வணிகர்களுக்கு உதவித்தொகை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

சிறு, குறு வணிகர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யும் ஆயுட்கால சந்தா கட்டணத்தொகை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி உறுப்பினராக பதிவு செய்யலாம். புதன்கிழமை தோறும் வணிக துறையை சேர்ந்த அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் வணிகர்களை சந்தித்து வணிக நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை பணிகளை மேற்கொள்கிறார்கள். 

சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தின் கீழ் பதிவுச்சான்று பெற்றவர்கள் பதிவுச்சான்றுடனும், பதிவு சான்று அல்லாதவர்கள் வணிகர் உரிமத்துடனும் மின்னஞ்சல் முகவரி, வருமானவரி நிரந்தர கணக்கு எண், செல்போன் எண், புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News