செய்திகள்
கொரோனா வைரஸ்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் அலட்சியத்தால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு

Published On 2021-08-01 10:19 GMT   |   Update On 2021-08-01 10:19 GMT
மக்கள் அலட்சியத்தால் நகர், புறநகர் பகுதிகளில் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் வெளியே வந்து செல்வது அதிகரித்து உள்ளது.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 349 பேர் வரை இறந்தனர்.

முழு ஊரடங்கு மற்றும் நோய்தடுப்பு காரணமாக தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளது. இருப்பினும் இறப்பு தொடருகிறது. நேற்று முன்தினம் ஒருவர் பலியானார்.

3-ம் அலை முன் எச்சரிக்கையாக நோய் தொற்று பரவல் தடுப்பு விதி முறைகளை பின்பற்ற அரசு வலியுறுத்தி உள்ளது. ஆனால் மக்கள் அலட்சியத்தால் நகர், புறநகர் பகுதிகளில் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் வெளியே வந்து செல்வது அதிகரித்து உள்ளது.

குறிப்பாக பஸ்களில் நின்றபடி பயணம் செய்கின்றனர். சந்தைகள், இ-சேவை மையங்கள், ஓட்டல்களில் சமூக இடைவெளியின்றியும், சானிடைசர் பயன் படுத்தாமலும், முக கவசம் அணியாமலும் செல்கின்றனர். இதனால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இதனை தடுக்க அனைவரும் முக கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின் பற்றவும் மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News