செய்திகள்
கோப்புபடம்

கால்நடை சந்தையை திறக்க வேண்டுகோள்

Published On 2021-07-30 09:17 GMT   |   Update On 2021-07-30 09:17 GMT
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக கால்நடை சந்தை இயங்கவில்லை.
திருப்பூர்:

திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 70 ஆண்டுகளாக கால்நடை சந்தை இயங்கி வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக கால்நடை சந்தை இயங்கவில்லை. ஊரடங்கு தளர்த்தப்பட்டு பல பகுதிகளில் கால்நடை சந்தைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கால்நடை சந்தைகள் திறக்கப்படவில்லை. இதனால் கால்நடை வளர்ப்பவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் இத்தகைய வாய்ப்பை பயன்படுத்தி கால்நடைகளை அடிமாட்டு விலைக்கு வாங்க வியாபாரிகளும் தயாராகிவிட்டனர். இது தொடர்பாக உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் கால்நடை சந்தையை விரைவில் திறக்க வேண்டும். 

தென்னம்பாளையத்தில் இடநெருக்கடி ஏற்பட்டால் கோவில்வழி அல்லது அமராவதிபாளையத்தில், கால்நடை சந்தையை திறக்க உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News